கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூரில் ஜெல்லட்டின் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மாவட்ட அலுவலர்கள் விரைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக வைத்திருந்த ஜெல்லட்டின் குச்சிகளை அப்புறப்படுத்தும் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, சட்டவிரோதமாக இதுபோன்ற ஜெல்லட்டின் குச்சிகளை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.