ஜம்மு காஷ்மீரில் 2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்த பெரும் மாற்றத்திற்கு பின் ஜம்மு காஷ்மீரின் முன்னணி அரசியல் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை (ஜூன் 24) சந்தித்தனர்.
ஓமர் அப்துல்லா பேட்டி
இந்த சந்திப்பு தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான ஓமர் அப்துல்லா ஸ்ரீநகரில் செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”முதலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்பி தர வேண்டும். அதன் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
முதலில் தேர்தல், அதன்பின் மாநில அந்தஸ்து என்ற மத்திய அரசு கூற்றை ஏற்க முடியாது. ஜம்மு காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை பெறும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என்றுக் கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. எனவே, அதை பற்றி விவாதிக்க தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "நானா, நிதிஷ் குமாரா”... பாஜகவுக்கு சாய்ஸ் கொடுக்கும் சிரக் பாஸ்வான்