ஜாம்ஷெட்பூர்: மத்திய அமைச்சரும் பாஜக மூத்தத் தலைவருமான அர்ஜுன் முண்டா ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தீதி (மம்தா பானர்ஜி) பாணி அரசியலை மக்கள் விரும்பவில்லை. அம்மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
மேலும் தற்போதைய அரசாங்கம் மக்களை வஞ்சித்துவருகிறது. இதிலிருந்து வெளியே வர மக்கள் திரண்டுவந்து வாக்களித்துள்ளனர்” என்றார். மேலும், சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவுவார் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை” என்றார். மேலும் அஸ்ஸாமில் மீண்டும் பாஜக ஆட்சியை தொடரும் என்ற அவர், அங்கு பல்வேறு நலத்திட்டங்கள் பாஜக அரசாங்கம் முன்னெடுத்துள்ளது” என்றும் கூறினார். அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதி நடந்தது.
அஸ்ஸாமில் சர்பானந்த சோனாவால் தலைமையிலான பாஜக ஆட்சியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.