மடகாஸ்கர் நாட்டின் அம்பஞ்சனா நகருக்கும், இந்து மதத்தின் முதல் இறையாண்மை நாடான கைலாசாவிற்கும் இடையே இரு நாட்டு உறவு கொள்கை கையெழுத்தானதாக என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த இருநாட்டு கொள்கை மூலம் நாட்டில் உள்ள பசியின்மை அகற்றுதல், தரமான கல்வி, கலாச்சார கொள்கை பகிர்தல் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் போன்ற முக்கிய கொள்கைகளை மையமாக கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா அவருக்கென தனி நாடாக ஒரு தீவை பிடித்து அதற்கு கைலாச என பெயரிட்டு சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பகீர் கிளப்பி வருகிறார். இந்த வகையில் தற்போது மடகாஸ்கர் நாட்டுடன் தூதரக உறவுக் கொள்கை கையெழுத்தாகியுள்ளது.
இதையும் படிங்க:பேச்சு வரலை.. யாரையும் அடையாளம் தெரியலை.. என்ன ஆச்சு நித்தியானந்தாவுக்கு..?