உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்காக பிரமாண்டமான கோயில் கட்டும் பணி நடந்துவருகிறது. முன்னதாக 70 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அக்கோயில் வளாகத்தின் சுற்றளவை அதிகரிக்கும் வகையில் அருகிலிருந்த நிலத்தை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை வாங்கியுள்ளது. ஒரு சதுர அடிக்கு ரூபாய் ஆயிரத்து 373 வீதம் 7 ஆயிரத்து 285 சதுர அடி நிலம் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அறங்காவலர் அனில் மிஸ்ரா, ராமர் கோயிலுக்கு அதிக இடம் தேவைப்பட்டதால் இந்த நிலத்தை வாங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமர் கோயில் கட்டுமானத்திற்காக தமிழ்நாடு சீடர்கள் 11 லட்சம் ரூபாய் நன்கொடை!
அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய், ராமர் கோயிலுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்து தீப் நாராயணனிடமிருந்து அந்நிலத்தை வாங்கியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், 70 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்ட நிலையில், அதற்காக கூடுதல் நிலம் வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மன்னிப்பு கடிதம் கொடுக்காத மக்கள் போராளி - புலவர் கலியபெருமாள்