ETV Bharat / bharat

இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா!

கோவிட்-19 பாதிப்பால் தவித்துவரும் இந்தியாவுக்கு அமெரிக்காவிடம் இருந்து முதற்கட்ட மருத்துவ உதவிகள் விமானம் மூலம் வந்து சேர்ந்தன.

medical supplies
medical supplies
author img

By

Published : Apr 30, 2021, 12:43 PM IST

கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவருவதால், சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு பல்வேறு மருத்துவ உதவிகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, அமெரிக்க சார்பில் வழங்கப்பட்ட முதற்கட்ட உதவிகள் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளன.

தடுப்பூசி தயாரிக்கும் மூல பொருள்கள், ரெம்டிசிவிர் மருந்துகள், ஆக்ஸிஜன் அதுசார்ந்த உபகரணங்கள் ஆகியவை இந்தியா சார்பில் கோரப்பட்டிருந்தது. இவை அனைத்தும் முதற்கட்டமாக விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செஞ்சிலுவை சங்கம் சார்பிலும் சில உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பூசிகள் லட்சக்கணக்கில் அமெரிக்காவிடம் கைவசம் உள்ள நிலையில் அவற்றை இந்தியா கொள்முதல் செய்வது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: மாஸ்க் போட்டு பைக்கில் ரைட் சென்ற நாய் - கர்நாடகவாசிக்கு பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.