ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் முதல் ஜிகா தொற்று... சுகாதாரத்துறை தகவல்!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு ஜிகா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

first case of zika identified at pune
first case of zika identified at pune
author img

By

Published : Aug 1, 2021, 7:09 AM IST

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள பெல்சார் கிராமத்தில் 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள முதல் ஜிகா தொற்று பாதிப்பாகும். இந்தப் பெண்ணுக்கு சிக்குன்குனியா இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஜிகா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தற்போது குணமடைந்துள்ளார். அவரது குடும்பத்தில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நேற்று (ஜூலை.31) மாநில அளவிலான சுகாதாரக் குழு ஒன்று பெல்சார் கிராமத்திற்குச் சென்று அங்கிருக்கும் சூழ்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருடன் இந்தக் குழு அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

ஜிகா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிந்தப் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: உஷார் மக்களே - தொடர்ந்து 3ஆவது நாளாக அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.