நேபாளம்: சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இந்தியாவின் வளமான, கலாசார, பாரம்பரிய இடங்களை காட்சிப்படுத்தவும் இந்திய ரயில்வே அமைச்சகம், "பாரத் கௌரவ்" ரயில்கள் இயக்கும் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது.
பாரத் கௌரவ் ரயில்கள் இந்தியா-நேபாளம் இடையே ராமாயணத்துடன் தொடர்புடைய புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறது. அயோத்தி, நந்திகிராம், சீதாமர்ஹூய், வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், நாஷிக், ஹம்பி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது.
அதன்படி முதல் பாரத் கௌரவ் ரயில் கடந்த 21ஆம் தேதி டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்தியாவிலிருந்து 500 பயணிகளை ஏற்றிச்சென்ற அந்த ரயில், இன்று (ஜூன் 23) நேபாளத்தின் ஜனக்பூர்தாம் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தது. அங்கு, நேபாளத்தின் மாதேஷ் பிரதேச முதலமைச்சர் லால்பாபு ராவத், ஜனக்பூர்தாம் மேயர் மனோஜ் குமார் ஷா, நேபாள ரயில்வே பொது மேலாளர் நிரஞ்சன் ஜா, காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரக ஆலோசகர் பிரசன்னா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் ரயில் பயணிகளை வரவேற்றனர்.
இந்த பக்தர்கள் ஜானகி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
இதையும் படிங்க:தங்கபதக்கங்களை குவித்த பெண் காவலர்-ஆசிய பளுதூக்கும் போட்டியில் சாதனை