ETV Bharat / bharat

Vande Bharat: போபால் - டெல்லி வந்தே பாரத் ரயிலில் தீ.. அலறியடித்து ஓடிய பயணிகள்!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டியில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

Fire in battery box
வந்தே பாரத்
author img

By

Published : Jul 17, 2023, 11:07 AM IST

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு இன்று(ஜூலை 17) காலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையத்திலிருந்து, டெல்லியில் உள்ள நிஜாமுதீன் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் சுமார் 7 மணியளவில் மத்தியபிரதேசத்தின் குர்வாய் கெத்தோரா ரயில் நிலையம் அருகே வந்தபோது, சி-14 (C-14) ரயில் பெட்டியின் பேட்டரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், அந்த பெட்டி முழுக்க புகை சூழ்ந்தது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.

இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் உடனே பேட்டரியில் பற்றிய தீயை அணைத்தனர். ரயில் பெட்டியில் இருந்த 36 பயணிகளையும் பத்திரமாக வெளியேற்றினர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது ரயில் பெட்டி முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் பயணிகள் சிலருக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆனால், ரயில் பயணிகள் யாருக்கும் காயம் உள்ளிட்ட எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

  • VIDEO | A fire broke out in a coach of Vande Bharat Express going from Bhopal to Delhi's Hazrat Nizamuddin Terminal at Kurwai Kethora railway station in Madhya Pradesh earlier today. No injury was reported in the incident.

    (Source: Third Party) pic.twitter.com/m1Nj0mHJ46

    — Press Trust of India (@PTI_News) July 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விபத்துக்குள்ளான சி-14 பெட்டியில் இருந்த பயணி ஒருவர் கூறும்போது, "காலை 7.10 மணியளவில் எனது இருக்கைக்கு அடியில் தீப்பிடித்து எரியும் சத்தம் கேட்டது. நான் உடனடியாக சக பயணிகளிடம் கூறினேன். இதனால் அனைவரும் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். ரயில் நிறுத்தப்பட்டு நாங்கள் கீழே இறங்கி பார்த்தபோது பேட்டரியில் தீப்பிடித்தது தெரியவந்தது" என்றார்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், குறிப்பிட்ட பேட்டரி பழுதாகியிருக்கலாம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பிறகு ரயில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த போபால் - டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மத்தியப் பிரதேசத்தின் முதல் வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயில் சேவையை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் ரயிலில் தரம் குறைவாக இருப்பதாகவும், உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை மோசமாக இருப்பதாகவும் பயணிகள் சிலர் குற்றம்சாட்டியிருந்தனர். அதேநேரம், வந்தே பாரத் ரயில்களில் தொடர்ந்து பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் - ரயில்வே அமைச்சர் கூறிய விளக்கம்...?!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.