சித்தூர்(ஆந்திரா):திருமலை - திருப்பதிக்குச் சென்ற கார் பாதி வழியில் கால்வாயில் தடம்புரண்டு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக தீயில் மாண்டனர்.
ஒருவர் மோசமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்க 3 பேர் படுகாயமடைந்து, திருப்பதி ருவா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
காவல் துறையினரின் விசாரணையில் இறந்தவர்கள், ஆந்திராவின் விஜயநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:நடிகர் விஜய் சேதுபதி மீது அவதூறு வழக்கு - உண்மையை ஆராயும் போலீஸ்