ETV Bharat / bharat

தெலங்கானா மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து... 11 பேர் உயிரிழப்பு..

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள மரக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 11 பேர் உயிரிழந்தனர்.

fire-broke-out-in-timber-depot-at-secunderabad

author img

By

Published : Mar 23, 2022, 7:46 AM IST

Updated : Mar 23, 2022, 9:33 AM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பாய்குடாவில் உள்ள மரக் கிடங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்து. அதனடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தரப்பிலிருந்து, மரக் கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த விபத்தின்போது 15 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டனர். 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தீ விபத்து நடத்த மரக்கிடங்கு

அனைவரும் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்களை மீட்க போராடிவருகிறோம். ஐந்து தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது. 11 பேரின் உடல் அருகிலுள்ள மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. தீக்காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: கோழிப்பண்ணையில் தீ விபத்து.. தீக்கிரையான கறிக்கோழிக்குஞ்சுகள்!

Last Updated : Mar 23, 2022, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.