மேற்கு வங்க மாநிலம் நிவேதிதா பள்ளியிலுள்ள சேரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. அதிருஷ்டவசமாக இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கடுமையாகப் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஒருவேளை பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்குமா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
முன்னதாக, மேற்குவங்க மாநிலத்தில் பட்டாசு வாங்கவோ, விற்கவோ தடை செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.