ETV Bharat / bharat

டெல்லி உணவகத்தில் தீ விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு - தீ விபத்து பலி

டெல்லியின் துவார்காவில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (ஆகஸ்ட். 15) ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

Fire breaks out in Delhi
Fire breaks out in Delhi
author img

By

Published : Aug 15, 2021, 11:27 AM IST

டெல்லி: துவார்கா பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதற்குள் தீ மளமளவென பரவியது. அதனால், எட்டு தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில், இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட தகவலில் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஃபாஸ்ட் புட் கடையில் தீ விபத்து: புரோட்டா மாஸ்டர் உள்பட 5 பேர் காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.