டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் உள்ள என்டோஸ்கோபி அறையில் ஏற்பட்ட தீயை, போராடி தீயணைப்பு வீரர்கள கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையின் இரண்டாவது மாடியில் என்டோஸ்கோபி அறை உள்ளது. இதற்கு முன் இந்த அறையை புறநோயாளிகள் பிரிவாக மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், என்டோஸ்கோபி அறையில் உள்ள வார்டில் தீடீரென தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலை 11.54 மணிக்கு தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த நிகழ்விடத்திற்கு 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் தீ விபத்தின் போது, வார்டில் இருந்த நோயாளிகள் வேறிடத்திற்கு மாற்றப்பட்டதாகவும், அதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் தொடர்ந்து கரும் புகை வெளியேறியதால், தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். எய்மஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு கரும் புகை வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : Lok Sabha adjourned : மக்களவை தொடர் முடக்கம்... சபாநாயகர் காட்டம்!