மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று பிற்பகல் புதிய ஆஷ்தி (ashti) பகுதியிலிருந்து அகமதுநகர் (ahmednagar) சென்ற பயணிகள் ரயில் நாராயந்தோ ரயில் நிலையம் அருகே சென்ற போது ரயிலில் தீடிரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
-
STORY | Fire engulfs five coaches of passenger train in Ahmednagar district; no casualties
— Press Trust of India (@PTI_News) October 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
READ: https://t.co/FQJSvHnc1K
VIDEO: pic.twitter.com/bj4DQZWIfC
">STORY | Fire engulfs five coaches of passenger train in Ahmednagar district; no casualties
— Press Trust of India (@PTI_News) October 16, 2023
READ: https://t.co/FQJSvHnc1K
VIDEO: pic.twitter.com/bj4DQZWIfCSTORY | Fire engulfs five coaches of passenger train in Ahmednagar district; no casualties
— Press Trust of India (@PTI_News) October 16, 2023
READ: https://t.co/FQJSvHnc1K
VIDEO: pic.twitter.com/bj4DQZWIfC
இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் "இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்தவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பிற்பகல் 3 மணி அளவில் ரயில் 5 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ரயிலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் என்னவென்பது குறித்து தெரியவரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "இது என்ன சந்தையா?" உங்க செல்போனை கொடுங்க.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி!