குஜராத் மாநிலம் வல்சாட்டில் உள்ள நெகிழி உற்பத்திக் கிடங்கில் இன்று (நவ. 14) பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், தீ கட்டுக்கடங்காமல் பரவியதால், கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து!