ETV Bharat / bharat

மருந்து நிறுவனத்தில் தீ விபத்து: 4 பேர் படுகாயம்

புதுச்சேரி: மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

மருந்து கம்பெனியில் தீ விபத்து
மருந்து கம்பெனியில் தீ விபத்து
author img

By

Published : Jun 6, 2021, 9:21 AM IST

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் ஆக்சென் ஃபார்மா என்ற பெயரில் தனியார் மருந்து நிறுவனம் மூன்று தளங்களுடன் இயங்கிவருகிறது. இங்கு சத்து, வலி நிவாரணி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

நேற்று (ஜுன் 5) மாலை தொழிலாளர்கள் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். உற்பத்தி கூடத்தில் திடீரென இயந்திரம் வெடித்துச் சிதறி இரண்டு தளங்களிலும் தீ பரவியது.

இது குறித்து தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து, தீயைப் போராடி அணைத்தனர். இதில் மாயவன், ரங்கராஜன், அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

தீ விபத்து காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன.

இதையும் படிங்க: திருப்பூர் காவல் உதவி ஆணையர் கரூர் எஸ்.பி.யாக மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.