ETV Bharat / bharat

டெல்லி விமான நிலையத்தில் தீ... விசாரணைக்கு உத்தரவு! - டெல்லி விமான நிலையம்

டெல்லி விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Delhi airport
Delhi airport
author img

By

Published : Jun 4, 2022, 1:39 PM IST

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் நேற்று (ஜூன்3) மாலை 5.25 மணியளவில் பொருள்கள் ஏற்றி இறக்கும் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்து காரணமாக அப்பகுதியே கருமேகமூட்டமாக காட்சியளித்தது. இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயமில்லை. சில பொருள்கள் மட்டும் தீயில் கருகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும் சிறிது நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையில் தீ விபத்து தொடர்பாக காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதைத் தொடர்ந்து, தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: ”போதைப் பொருள் உலகளாவிய பிரச்சினை" - கமல் ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.