சண்டிகர்: பஞ்சாப் பாஜக எம்எல்ஏ அருண் நரங்கை 200-250 பேர் கொண்ட கும்பல் தாக்க முயன்றது. இந்தத் தாக்குதலிலிருந்து அவர் உயிர் தப்பினார். இந்நிலையில், பாஜக எம்எல்ஏ அருண் நரங்கை தாக்க முயற்சித்ததாக ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, முக்த்சர் மாவட்டத்தில் உள்ள மாலவுட்டில் சனிக்கிழமை (மார்ச் 28) நாரங், விவசாயிகள் குழுவால் தாக்கப்பட்டார். அவர்கள் எம்எல்ஏவின் துணிகளை கிழித்தனர்.
விவசாய சட்டங்களால் பாஜக தலைவர்கள் கடந்த பல மாதங்களாக விவசாயிகளின் கோபத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், அபோஹார் சட்டப்பேரவை உறுப்பினர் அருண் நாரங் சனிக்கிழமையன்று உள்ளூர் தலைவர்களுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றுவதற்காக மாலவுட்டை அடைந்தபோது தாக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் தாக்கப்பட்டேன், என் ஆடைகள் கிழிக்கப்பட்டன” என்றார்.