டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க துணைத் தலைவர் உள்பட மூன்று பேர் மீது வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில நாள்களுக்கு ஜேஎன்யூ முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சி மாணவி ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபரால் மானபங்கம் செய்யப்பட்டார்.
இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மாணவியின் செல்போனை பறித்து அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளார். அப்போது மாணவி கூச்சலிட்டதால், இருசக்கர வாகனத்தில் வந்து அங்கிருந்து வேகவேகமாக சென்றுவிட்டார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபரை கைது செய்யக்கோரி மாணவர் சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோவிட் விதிமுறைகளை மீறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க துணைத் தலைவர் சாகேத் மூன், இணைச் செயலாளர் முகமது டேனிஷ் டோலன் மற்றும் லதா சரண் ஆகியோர் மீதும் வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.