பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் அஜித்தின் 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் பட ரசிகர்களிடையே பிரபலமானவர். இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று தனது மனைவியுடன் பைக்கில் ரைடு சென்ற வீடியோவை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து மாஸ்க் போடாமல் கரோனா விதிமுறையை மீறியதற்கும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாமல் இருந்ததற்கும் விவேக் ஓபராய் மீது மும்பை ஜுகு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கரோனா பரவல் குறையாத நிலையில், இதுபோன்று கரோனா விதிமுறைகளை மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கோலிவுட்டில் அவதாரம் எடுக்கும் வார்னர்!