ETV Bharat / bharat

பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு - தொடர் மிரட்டல்!

author img

By

Published : Jun 15, 2021, 10:50 AM IST

பெண் காவலரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து மிரட்டி வந்த நபர்கள் மீது, காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

fir-against-3-men-for-raping-female-cop-in-mumbai

மும்பை: பெண் காவலர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பெண் காவலர் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக மூன்று பேர் மீது மேக்வாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், 'குற்றம்சாட்டப்பட்ட நபர் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர். இவருக்கும், பெண் காவல் ஆய்வாளருக்கும், சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் தங்களது நட்பினை வளர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், அந்நபர் மும்பையில் உள்ள போவாய் பகுதிக்கு வந்து பெண் காவலரைச் சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனை அந்நபர் புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டி, அவரது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பெண் காவலரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதையடுத்து, பெண் காவலரின் புகாரின்பேரில், ஜுன் 11ஆம் தேதி மும்பையில் உள்ள மேக்வாடி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜீரோ எஃப்ஐஆரின்கீழ் பூவாய் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை: இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.