ETV Bharat / bharat

பெங்களூருவில் ஜி20 நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் - Central Bank Deputies meeting in Bengaluru

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.

பெங்களூருவில் ஜி20 நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம்

author img

By

Published : Dec 11, 2022, 3:39 PM IST

டெல்லி: இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் டிசம்பர் 13-15 தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சகமும், இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் தலைமையிலான கூட்டம் நிதி வழிமுறை, பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்களில் கவனம் செலுத்துகிறது.

இது உலகளாவிய பொருளாதார விவாதம் மற்றும் கொள்கை ஒருங்கிணைப்புக்கான ஒரு பயனுள்ள அமைப்பை வழங்குகிறது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் டிசம்பர் 13-15 தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. அதேபோல முதலாவது நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் 2023ஆம் ஆண்டும் பிப்ரவரி 23-25 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும்.

ஜி20 நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகளின் கூட்டத்துக்கு பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் மற்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் டி. பத்ரா ஆகியோர் இணைந்து தலைமை தாங்குவார்கள். இந்த கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகளில் இருந்தும், இந்தியாவால் அழைக்கப்பட்ட பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

நிதி வழிமுறை, உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், சர்வதேச நிதிக் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதியுதவி, நிலையான நிதி, உலகளாவிய சுகாதாரம், சர்வதேச வரிவிதிப்பு மற்றும் நிதிச் சேர்க்கை உள்ளிட்ட நிதித் துறை பிரச்சினைகளை உள்ளடக்கிய, உலகப் பொருளாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய விஷயங்களைப் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இதனிடையே, 21ஆம் நூற்றாண்டின் பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பில் ஒரு குழு விவாதம் நடைபெறும். பசுமை நிதியளிப்பில் மத்திய வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இமாச்சல் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.