ETV Bharat / bharat

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! - maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்படட் பயங்கர தீ விபத்தில அந்நிறுவனம் முற்றிலும் சேதமானது.

மகாராஷ்டீரா தொழிற்சாலையில்  தீ விபத்து!
மகாராஷ்டீரா தொழிற்சாலையில் தீ விபத்து!
author img

By

Published : Jun 29, 2022, 8:48 AM IST

தாரப்பூர்(மகாராஷ்டிரா):பைசர் தாராபூரில் உள்ள தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சில இடங்களில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பைசர் தாராபூர் தொழிற்பேட்டையில் உள்ள பிரிமியர் இன்டர்மீடியேட்ஸ் ஆலை எண் 56 அல்லது 57ல் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் நிறுவனம் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனத்தில் உள்ள சில இடங்களில் 8 முதல் 10 தொடர்ச்சியான வெடி விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயின் தீவிரம் மிகவும் கடுமையாக இருந்ததால், அப்பகுதியை புகை சூழ்ந்துள்ளது.

இந்த தீ விபத்தால் சுற்றுவட்டார பகுதியில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.தீயை தொடர்ந்து ஏற்பட்ட வெடி சத்தத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் நடந்த கொடூரம்: தலை துண்டிக்கப்பட்டு டெய்லர் கொலை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.