பாகு: அஜர்பைஜான் பாகு நகரில் ஃபடே உலக கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த ஜூலை 30 தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில், இதில் நடந்த இரண்டு போட்டிகளில் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தனர். முதல் கால் இறுதி போட்டி செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நார்வேஜியன் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் டி குகேஷ் மோதினர்.
இதையும் படிங்க: Ben Stokes: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற பென் ஸ்டோக்ஸ்... காரணம் என்ன?
இப்போட்டியில், நார்வேஜியன் மேக்னஸ் கார்ல்சன் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி குகேஷுக்கு நெருக்கடியை கொடுத்தார். இதன் மூலம் இப்போட்டியில் குகேஷ் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் நேற்று 2வது ஆட்டத்தில் களம் இறங்கிய குகேஷ், கார்ல்சனுடனான ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கார்ல்சன் அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி மற்றும் பிரஜ்ஞானந்தா மோதினர். இதில் முதல் சுற்றில் பிரஜ்ஞானந்தா தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார். மேலும், மற்றொரு கால் இறுதி முதல் ஆட்டத்தில் டிரா செய்த விதித் குஜராத்தி, இரண்டாவது ஆட்டத்தில் அஜர்பைஜானின் அபாசோவிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க: தடையில்லா சான்றிதழ் பெறாமல் அமெரிக்கா சென்ற வீரர்கள்.. விளக்கம் கேட்டு பாக். கிரிக்கெட் வாரியம் நேட்டீஸ்!