கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கில் உள்ள ஜல்பைகுரி, ஜார்கிராம், கலிம்பாங்கி ஆகிய மாவட்டங்களில் இந்த மாத தொடக்கத்திலிருந்து 1,400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதில், மூன்று குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை, 'காய்ச்சலால் உயிரிழந்த மூன்று குழந்தைக்கும் பிற நோய்கள் இருந்தன. உயிரிழப்புக்கு இதுவே காரணம் மர்மக் காய்ச்சல் என்று ஏதுமில்லை. முதல்கட்ட தகவலில் சுவாசக்கோளாறு காரணமாக இந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 52 பேருக்கு திடீர் காய்ச்சல்