ETV Bharat / bharat

40 நாள் குழந்தையின் வயிற்றில் கரு - 40 நாள் குழந்தையின் வயிற்றி கரு

பிகார் மாநிலத்தில் பிறந்த 40 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் கரு உருவாகியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

40 நாள் குழந்தையின் வயிற்றி கரு- பிகாரில் வினோத சம்பவம்!

author img

By

Published : May 30, 2022, 12:45 PM IST

மோதிஹரி(பிகார்): பிகார் மாநிலத்தில் உள்ள மோதிஹரியில் வினோதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ரஹ்மானியா மருத்துவ மையத்தில் சிகிச்சைப் பெற வந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. அக்குழந்தை பிறந்து 40 நாட்களே ஆகியுள்ளது.

இது குறித்து மருத்துவர் கூறுகையில், குழந்தையின் வயிற்றில் வீக்கம் உள்ளதாக சிகிச்சை எடுக்க வந்தனர். பின்னர் அக்குழந்தையால் சரிவர சிறுநீர் கழிக்கவில்லை எனவும் தெரியவந்தது. அந்த வீக்கத்தை பரிசோதித்து பார்த்த போது குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டதாக கூறினார்.

மேலும் இந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தப்ரேஸ் அஜீஸ் அளித்த தகவலின் படி, இந்த பாதிப்பு ' கருவிற்குள் கரு’ எனும் அரியவகை ஒன்றாகும். இது 5 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.

இந்த பாதிப்பு உண்டான 40- நாள் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அஜீஸ் தெரிவித்தார். மேலும் குழந்தை தற்போது நலமாக உள்ளதாகவும் கூறினார். இந்த சம்பவம் மூலம் அரியவகை பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படிங்க:பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி- 11 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.