பஞ்சாப்பில் பெரோஸ்பூர் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 23 வயது இளைஞரை, அம்மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர் அளித்த தகவலின் பேரில், இன்று (மே.24) காலை எல்லை பாதுகாப்புப் படையுடன் இணைந்து, மாநில காவல் துறையினர் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ராம் லால் எல்லைப் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.9 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக, அவரை கைது செய்த போது, 180 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த சர்வதேச மதிப்பு சுமார் ரூ.65 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கைதான நபரை, 5 நாள்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.