ETV Bharat / bharat

உள்ளாடையை கழற்றச்சொல்லி நிர்பந்தித்த அலுவலர்கள் - நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த அவலம்! - பெண் அலுவலர்கள் மீது மாணவி புகார்

கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற பெண் அலுவலர்கள் நிர்பந்தித்தாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளாடையை கழற்றிய பிறகே மாணவிகள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEET
NEET
author img

By

Published : Jul 18, 2022, 8:10 PM IST

கொல்லம்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) நடைபெற்றது. நீட் தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேர்வு மையத்திற்குள் செல்லும் முன்பு, தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்படுவர். பெண் தேர்வர்கள், மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக் கொண்டு சோதனை செய்யப்படுவர். இதுபோன்ற சோதனைகளுக்குப் பல ஆண்டுகளாக பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தேர்வெழுதச்சென்றுள்ளார். அவரை சோதனை செய்த பெண் அலுவலர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மெட்டல் டிடெக்டர் சோதனையின்போது அவரது உள்ளாடையை கழற்ற நிர்பந்தம் செய்துள்ளனர். கழற்றிய பிறகே தேர்வுக்கு அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். பெண் அலுவலர்களின் நடவடிக்கையால் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு மட்டுமல்லாமல் ஏராளமான பெண்களின் உள்ளாடைகளை கழற்ற வைத்தார்கள் என்றும், தேர்வு முடிந்து வந்து பார்த்தபோது அட்டைப்பெட்டி முழுவதும் உள்ளாடைகள் இருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தாங்கள் சோதனை செய்யவில்லை என்றும், மெட்டல் டிடெக்டர் சோதனை வெளியாட்கள் மூலமே நடத்தப்பட்டது என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பக்தரின் தங்கத்தாலான பூஜை சாமான்களை திருடிய கோயில் பூசாரி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.