ஜார்கண்ட்: கோடாவில் 22 வயது இளைஞரின் உடலில் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உதவி மருத்துவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக அந்த இளைஞருக்கு வயிற்று வலி இருந்தது.
மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு, அவருக்கு சிறுவயதில் இருந்தே வலது பக்கத்தில் குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது. அல்ட்ராசவுண்ட் பலமுறை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது, அவரது உடலில் கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய் உள்ளிட்ட பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக வளர்ந்திருப்பதை மருத்துவர் கண்டறிந்தார்.
மருத்துவர் தாரா ஷங்கர் ஜா கூறுகையில், இந்த வழக்கு மில்லியன் கணக்கானவர்களில் ஒருவருக்கு ஏற்படுகிறது. இது ட்ரூ ஹெர்மாஃப்ரோடைட் என்று அழைக்கப்படுகிறது. உயிரியல் ரீதியாக இது பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம் (பிஎம்டிஎஸ்) என அழைக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் அகற்றப்பட்டன. அந்த இளைஞர் தற்போது ஆரோக்கியமாக உள்ளார் என மருத்துவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திடீரென கோடீஸ்வரர்களான இளைஞர்கள்.. கேரளாவில் நடந்தது என்ன?