இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தடுப்பூசிக்கான தேவை அதிகரிப்பதால், சில மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர கால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு இன்று (ஏப்ரல்.13) அனுமதி அளித்துள்ளது.
மேலும் வெளிநாட்டு தடுப்பூசி செலுத்தப்படும் முதல் 100 பேரை, 7 நாட்களுக்கு கண்காணித்து பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ’ஸ்புட்னி வி’ தடுப்பூசி: ஆண்டுக்கு 85 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யவுள்ள இந்தியா!