ETV Bharat / bharat

ராகுல் காந்தி பேஸ்புக் பதிவு நீக்கம்! - ராகுல் காந்தி பேஸ்புக் பதிவுகள் நீக்கம்

சமூக வலைதளம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளை மீறி பதியப்பட்டதாக ராகுல் காந்தியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகள் நீக்கப்பட்டன.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Aug 20, 2021, 8:43 PM IST

ஹைதராபாத் : டெல்லியில் பட்டியலின சிறுமி ஒருவர் பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சிறுமியின் பெற்றோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

ராகுல் காந்தி மீது புகார்

இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் வன்கொடுமை, போக்சோ சட்ட விதிகளுக்கு எதிரானது, ஆகவே ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

பாலியல் வன்கொடுமையின் மையப்புள்ளி டெல்லி- காங்கிரஸ் கடும் தாக்கு!

காவல் நிலையத்திலும் இது தொடர்பாக சில புகார்கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் ராகுல் காந்தியின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

பதிவுகள் நீக்கம்

சமூக வலைதள விதிகளுக்கு முரணாக இருப்பதால் பதிவுகள் நீக்கப்பட்டதாக சமூக வலைதள நிறுவனங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சிறுமியின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

ஆகஸ்ட் 1ஆம் தேதி டெல்லியின் தென்மேற்கு பகுதியில் 9 வயதான பட்டியலின சிறுமி பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மத சடங்குகள் நடத்துபவர் உள்பட 4 பேர் காவலர்களால் கைதுசெய்யப்பட்டனர்.

ஆறுதல்

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்த ராகுல் காந்தி நாடே உங்கள் பின்னால் நிற்கும், சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என்று ஆறுதல் கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : டெல்லி சிறுமி கொலை- நியாயமான விசாரணை தேவை- பாஜக!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.