கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நேபாளத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஜனக்ராஜ் பிஸ்தா (32) தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் வசித்துவந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜனக்ராஜின் மனைவி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
அதனால், ஜனக்ராஜ் மிகுந்த மனவேதனையில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று (நவ. 13) ஜனக்ராஜ் தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அங்கு வந்த காவலர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா உறுதிசெய்யப்பட்டதால் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை!