ETV Bharat / bharat

"காதல் கேட்குதா?" பெற்ற மகளை செல்பி வீடியோ எடுத்து கொலை செய்த தந்தை! - etv bharat tamil news

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை அவரை கொலை செய்து அதனை செல்பி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"காதல் கேட்குதா?" பெற்ற மகளை செல்பி வீடியோ எடுத்து கொலை செய்த தந்தை!

author img

By

Published : Nov 7, 2022, 10:26 AM IST

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அல்லிபுரத்தை சேர்ந்தவர் வரபிரசாத்(Varaprasad). ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில், வரபிரசாத்தின் இரண்டாவது மகள் லகிதா வயது 16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

படிப்பில் கெட்டிக்காரியான லகிதாவும், அதேபகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் பெண்ணின் தந்தை வரபிசாத்திற்கு தெரிந்த பிறகு தனது பெண்ணை அழைத்து கண்டித்துள்ளார். அதோடு, அந்த இளைஞர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளதையும் எடுத்துக்கூறி எச்சரிக்கை செய்ததாக தெரிகிறது.

ஆனாலும், தனது காதலை விட மறுத்த அந்த பெண் அந்த இளைஞடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வரபிரசாத் நவம்பர் 4-ஆம் தேதியன்று மகள் லகிதாவை துடிதுடிக்க கழுத்தறுத்து கொலை செய்ததோடு “என் மகள் காதலித்தால் கொலை செய்துவிட்டேன்” என்று செல்பி வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

அந்த கொடூர காட்சியை பலரும் பகிர்ந்தனர். மேலும் வரபிரசாத்தின் இரண்டாவது மகள் விசாகப்பட்டினம் நகர போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரபிரசாத்தை கைது செய்தனர். கருத்துவேறுபாடு காரணமாக வரபிரசாத் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.