சாஹிப்கஞ்ச் (ஜார்கண்ட்): வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாண்ட்ரோ தொகுதியின் சிர்சா கிராமத்தில், ஒரு நபர் தனது குழந்தையைப் பாத்திரத்தில் கொண்டுவந்து சுகாதார ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த கன மழையின் காரணமாக, அனைத்து இடங்களில் வெள்ளம் குளம்போல் நிரம்பியிருந்தது. இந்நிலையில், தனது கைக்குழந்தையைப் பாத்திரத்தில் வைத்து, அதன் தந்தை நீந்தியபடி ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அலுவலர்கள், ஏன் குழந்தையை இப்படி அழைத்துவந்தீர்கள் எனக் கேட்க, பதிலுக்கு அவர் கூறியதுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஆம், இவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி, அவரது குழந்தைக்கு போலியோ தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக, குழந்தையைப் பாத்திரத்தில் வைத்தபடி நீச்சலடித்துவந்துள்ளார்.
குழந்தையின் எதிர்காலம் குறித்த தந்தையின் முயற்சியை அங்கிருந்தவர்கள் அனைவரும் பாராட்டினர். சற்றும் தாமதிக்காமல், சுகாதார ஊழியர்கள் குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்தினர். அதன்பின், அவர்கள் குழந்தையுடன் உற்சாகமாகப் படம் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் ஊசி செலுத்திய செவிலி - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி