ETV Bharat / bharat

லக்கிம்பூர் வன்முறை: விவசாயிகள் ரயில் மறியல்; அமைச்சர் பதவி விலக போர்க்கோடி

லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமானவர் எனக் குற்றஞ்சுமத்தப்பட்ட ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகக்கோரி சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஆறு மணிநேர ரயில் மறியல் போரட்டத்தை நடத்திவருகிறது.

லக்கிம்பூர் வன்முறை
லக்கிம்பூர் வன்முறை
author img

By

Published : Oct 18, 2021, 2:19 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரியில் கடந்த 3ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையில் உழவர் நால்வர், பாஜகவினர், பத்திரிகையாளர் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு, ஒன்றிய உள் துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

தற்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

ரயில் சேவை பாதிப்பு

இதன்பின்னர், இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டியும், இந்த விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டியும், நாடு முழுவதும் இன்று (அக். 18) காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை என ஆறு மணிநேர ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால், இந்தப் போராட்டத்தினால் எந்த அசாம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடந்திவரும் நிலையில், சட்ட ஒழுங்கைக் கண்காணிக்க அதிகளவில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: த(க)ண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்: கரோனாவுக்குப் பின் பேரிடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.