டெல்லி: விவசாயிகள் காசியாபூர் எல்லையில் திங்கள்கிழமை (மார்ச் 29) ட்ரம் இசைத்து, நடனமாடி, பாட்டு பாடி ஹோலி பண்டிகை கொண்டாடினார்கள். இது குறித்து பாரதிய கிஷான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பழங்காலத்திலிருந்தே மக்கள் ஹோலியை கொண்டாடி வருகின்றனர். எங்கள் விவசாய சகோதரர்களும் இந்த விழாவை திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நாங்கள் பாடுகிறோம், நடனம் ஆடுகிறோம், மக்களை சந்தித்து எங்களுக்கு ஆதரவு கோருகிறோம்” என்றார்.
இந்தக் கொண்டாட்டத்தின்போது ராகேஷ் திகைத்தின் மனைவி சுனிதா தேவியும் உடனிருந்தார். இதைத்தொடர்ந்து ராகேஷ் திகைத் கூறுகையில், “ஹோலி பண்டிகையை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்று நினைப்பார்கள். இந்நேரத்தில் நாங்கள் பிரிந்து இருக்கிறோம், இதற்கு நல்ல உணர்வு அல்ல. இருப்பினும் நாங்கள் கவலைக்கொள்ளவில்லை.
விவசாயிகள் அனைவரும் எங்களது சகோதரர்கள். எங்கள் கோரிக்கையில் அரசு தீவிர கவனம் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் பாடல்கள் பாடி, நடனங்கள் ஆடி பாரம்பரிய முறைப்படி ஹோலி கொண்டாடினோம்” என்றார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
நூறு நாள்களை தாண்டியும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஹோலி வாழ்த்து!