ETV Bharat / bharat

கங்கையில் வீசப்பட்ட பதக்கங்கள்? மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் என்ன நடந்தது?

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டக் களத்திற்கு விரைந்த விவசாய சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Wrestlers
Wrestlers
author img

By

Published : May 30, 2023, 7:50 PM IST

ஹரித்வார் : மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டக் களத்திற்கு விரைந்த பாரதிய விவசாய சங்கத்தின் தலைவர் நரேஷ் டிகாயிட், வீரர், வீராங்கனைகளிடம் இருந்து பதக்கங்களை பெற்றுக் கொண்டார். மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க 5 நாட்கள் அவகாசம் வழங்குமாறு மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் கோரினார்.

இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தர் சாலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றம் கடந்த 28ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், தங்களுடைய புகார் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தின் முன் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

திறப்பு விழா நாளில் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி போலீசார் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றனர். மேலும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

  • #WATCH | Naresh Tikait arrives in Haridwar where wrestlers have gathered to immerse their medals in river Ganga as a mark of protest against WFI chief and BJP MP Brij Bhushan Sharan Singh over sexual harassment allegations. He took medals from the wrestlers and sought five-day… pic.twitter.com/tDPHRXJq0T

    — ANI (@ANI) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால், நாட்டுக்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீச உள்ளதாகவும், இந்தியா கேட் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அறிவித்தார்.

இந்தியா கேட் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். தேசிய நினைவுச் சின்னம் முன் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும் அப்படி போராட்டம் நடத்தினால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • Farmer Leader Naresh Tikait arrives in Haridwar where wrestlers have gathered to immerse their medals in river Ganga as a mark of protest against WFI chief and BJP MP Brij Bhushan Sharan Singh over sexual harassment allegations. He took medals from the wrestlers and sought… pic.twitter.com/41bVOuhXQh

இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி மாலை 6 மணிக்கு கங்கை நதியில் பதக்கங்களை வீச உள்ளதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர். இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாருக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சென்றனர்.

அங்கு, ஹர் கி பவுரி பகுதியில் கங்கை நதியின் முன் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் திரண்டனர். கங்கை நதியின் முன் அமர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை தொட்டுப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். இந்நிலையில், வீரர், வீராங்கனைகள் போராட்டக் களத்திற்கு விரைந்த விவசாயிகள் தலைவர் மற்றும் பாரதிய கிஸான் சங்கத்தின் தேசியத் தலைவருமான நரேஷ் டிகாயிட், வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், கங்கை நதியில் வீச இருந்த பதக்கங்களை வீரர் வீராங்கனைகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவர், 5 நாட்களில் அவகாசம் தருமாறும் அதற்குள் பிரிஜ் பூஷன் சிங் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து வீரர், வீராங்கனைகளின் போராட்டக் களத்தை விட்டு வெளியேறினர்.

இதையும் படிங்க : கங்கை முன் திரண்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள்! போலீசாருடன் வாக்குவாதம்.. உச்சக்கட்ட பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.