டெல்லி: வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள், டிசம்பர் 30ஆம் தேதி அரசு மறு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததை ஏற்றுக்கொண்டனர். ஆனால், இந்தச் சட்டத்தை நீக்கவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 30ஆம் தேதி வேளாண் திருத்தச் சட்டத்தை நீக்கக் கோரி டிராக்டர் பேரணி நடைபெறுவதாக இருந்த நிலையில், அரசு பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் பல்பிர் சிங் ராஜிவால் சம்மதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பேசிய பல்பிர், பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் பிரச்னை என்று நீங்கள் நினைத்தது தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது என்றார்.
நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவர் பிரதமர் நரேந்திர மோடி சொல்வதை கேட்டுக் பொம்மையாக இருக்கிறார். சர்ச்சைக்குரிய இந்த வேளாண் திருத்தச் சட்டததை நீக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தாலும், மோடிக்காக இந்த சட்டத்தை ஆதரிக்கிறார் என்றார்.