உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகர் பகுதியில் வசிப்பவர் ராம்ஜி லால் என்ற விவசாயி. இவரது மின் இணைப்புக்கான கட்டணம் ஒன்றரை லட்சம் ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. தொகையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராம்ஜி லால், அவரது குடும்பத்தினர் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தனது மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.1,500-க்கு பதிலாக ரூ.1,50,000 எனத் தவறாகப் பதிவாகியுள்ளது எனப் புகார் கூறியுள்ளனர். அதேவேளை, மின் கட்டணம் செலுத்துவதற்குத் தாமதம் ஏன் எனக் கூறி அலுவலர்கள் ராம்ஜி லாலை பொதுவெளியில் வைத்து அறைந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ராம்ஜி நேற்று தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் இந்தச் சம்பவத்திற்கு காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை எடுக்க மாட்டோம் எனப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த காவல் துறை மக்களைச் சமாதானப்படுத்தியது. அதன் பின்னர் ராம்ஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தற்சார்பு இந்தியா கனவு நனவாக வேண்டும் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா