ETV Bharat / bharat

டோனி, ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட்டால் இந்தியாவுக்கு நடந்த கொடுமை! ரசிகர்கள் விமர்சனம்! - T20 womens world cup

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியது. 2019ஆம் ஆண்டு டோனி ரன் அவுட்டானது போல் மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட்டானது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ரன் அவுட்
ரன் அவுட்
author img

By

Published : Feb 24, 2023, 12:27 PM IST

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ரன் அவுட்டானதையும், கடந்த 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அப்போதைய இந்திய கேப்டன் டோனி ரன் அவுட் செய்யப்பட்டதையும் ஒப்பிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

8-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று(பிப்.24) கேப்டவுனில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது.

இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டும் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52ரன்), ரோட்ரிக்ஸ் (43ரன்) ஜோடி அணியை நல்ல நிலையில் கொண்டு சென்ற போதும் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் சரி வர செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் ஆனது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் ரன் அவுட் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

  • Match winner at the crease and Run out in a semi-final. We have had this heartbreak before. Sad to see India out. Were running away with the game but Australia proved again why they are a v difficult side to beat. Well tried girls #INDWvAUSW pic.twitter.com/wNsVc3vb2D

    — Virender Sehwag (@virendersehwag) February 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேப்டன் டோனி நூலிழையில் அவுட்டானர். அதுவரை வெற்றி வாய்ப்பில் நீடித்த இந்திய அணி இறுதியில் தோல்வியை தழுவி கோப்பை கனவை கோட்டைவிட்டது.

தற்போது அதேபோன்ற சம்பவம், மீண்டும் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் அரங்கேறி உள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ரோட்ரீக்ஸ் ஆகியோர் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இதில் கேப்டன் ஹர்மன்பிரீத்தின் எதிர்பார்க்க முடியாத ரன் அவுட் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இறுதியில் இந்திய மகளிர் அணி 5 ரன் வித்தியாசத்தில் உலக கோப்பை கனவை கோட்டைவிட்டது. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இரு இந்திய கேப்டன்கள் ரன் அவுட்டாகி அதன் மூலம் இந்திய அணி உலக கோப்பை கனவு தகர்ந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போர் ஓராண்டு நிறைவு! தொடரும் மரண ஓலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.