ETV Bharat / bharat

பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்

கமல் நடிப்பில் வெளியான சலங்கை ஒலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமான பிரபல தெலுங்கு இயக்குநர் கே. விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்
பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்
author img

By

Published : Feb 3, 2023, 8:03 AM IST

தெலுங்கானா: பல அற்புதமான படங்களைக் கொடுத்து கலாதபஸ்வி என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற தெலுங்கு இயக்குனர் விஸ்வநாத் (92) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளாவே வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த அவருக்கு, நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடநலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகில் முத்திரை பதித்த விஸ்வநாத், சலங்கை ஒலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனார். கடந்த 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 தேதி ஆந்திராவில் பிறந்த இவர், குண்டூர் இந்துக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பையும், ஆந்திர கிறிஸ்தவக் கல்லூரியில் பி.எஸ்.சி.யையும் முடித்தார். இவரது தந்தை சென்னையில் உள்ள விஜயவாஹினி ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார்.

பட்டப்படிப்பை முடித்த விஸ்வநாத் அதே ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். முதன்முறையாக ’படால் பைரவி’ எனும் படத்தில் உதவி ஒலிப்பதிவாளராக பணியாற்றினார். பின்னர் 1965-ல் ‘ஆத்ம கௌரவம்’ எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே மாநில விருதான நந்தி விருது பெற்றார். தெலுங்கு மட்டும் ஹிந்தியிலும் படங்களை இயக்கியுள்ளார்.

50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் 9 படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் 'சங்கராபரணம்', 'ஸ்வாதிமுத்யம்', 'சாகர சங்கமம்' உள்ளிட்ட படங்கள் பெறும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. ’சாகர சங்கமம்’ திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘சலங்கை ஒலி’ எனும் பெயரில் வெளியாகி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இயக்குநர் விஸ்வநாத் கடந்த 1992 இல் பத்மஸ்ரீ விருது, 2016 இல் திரைப்படத் துறையில் மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது, 5 தேசிய விருதுகள், 10 தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள், ஒரு இந்தி ஃபிலிம் ஃபேர் விருது என விருதுகளை பெற்றுள்ளார். இது மட்டுமின்றி குருதிப்புனல், யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, சிங்கம் 2, லிங்கா, உத்தம வில்லன் போன்ற படங்களில் முக்கிய கதாப்பத்திரத்திலும் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அன்பு இதயங்களே நான் 90% குணமடைந்து விட்டேன் - நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.