பிரபல நடிகர் மகேஷ் பாபுவி தாயார் இந்திரா தேவி சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கிருஷ்ணா - இந்திராதேவிக்கு ஐந்து குழந்தைகள். மகன்கள் ரமேஷ் பாபு மற்றும் மகேஷ் பாபு மற்றும் மகள்கள் பத்மாவதி, மஞ்சுளா மற்றும் பிரியதர்ஷினி.
தற்போது இந்திராதேவியின் மரணத்தால் மகேஷ் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.