புதுச்சேரி கடற்கரையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டு சுனாமி மீட்பு ஒத்திகை நேற்று மாலை நடந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று இரவு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கை சமூகவலைதளத்தில் பரவியது.
அந்த அறிக்கையில்,” சுனாமி எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி இன்று 15ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூகவலைதளத்தில் பரவும் செய்திக்குறிப்பு போலியானது என்றும், 15ஆம் தேதி வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்கள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : படப்பிடிப்பு கட்டண குறைப்பு விவகாரம்; புதுச்சேரி முதலமைச்சர், பாக்யராஜ் சந்திப்பு!