ETV Bharat / bharat

Chhattisgarh: போலி பாராமெடிக்கல் கல்லூரிகள் வசூல் வேட்டை! 12 ஆயிரம் மாணவர்களின் வாழ்க்கை? - சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 22 போலி பாராமெடிக்கல் கல்லூரிகள் இயங்கி வருவதாகவும், கோடிக்கணக்கான ரூபாய் பணம் கட்டணமாக வசூலித்தும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காததால் 12 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

paramedical colleges
paramedical colleges
author img

By

Published : Jul 5, 2023, 3:37 PM IST

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் போலி பாராமெடிக்கல் கல்லூரி நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்து இருப்பதாகவும், அதனால் 12 ஆயிரம் மாணவ மாணவியர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏறத்தாழ 22 போலி பாராமெடிக்கல் கல்லூரிகள் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லேப் டெக்னீசியன், லேபர் அட்டெண்டர், ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன், எக்ஸ்-ரே டெக்னீசியன், டிரஸ்ஸர் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் இந்த பாராமெடிக்கல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

கரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் மருத்துவத் துறைக்கு ஏற்பட்டு உள்ள முக்கியத்துவம், நீடித்த பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 12 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்களது வருங்காலம் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், மாணவர் சேர்க்கையின் போது கல்லூரிகள் வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கூறுகின்றனர். 50 ஆயிரம் ரூபாய் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த கல்லூரிகளில் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் நடுத்தர மற்றும் கீழ்மட்ட பொருளாதர வகுப்புகளை சேர்ந்தவர்கள் என்றும் விவசாயக் கூலி உள்ளிட்ட தொழில்களில் இருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு கல்லூரி கட்டணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. கடன் வாங்கி கல்விக் கட்டணம் செலுத்தி உள்ளதாகவும், முதலாம் ஆண்டு எழுதிய தேர்வின் முடிவுகளை கூட கல்லூரி நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் கல்லூரி சேர்க்கையின் போது மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை ஆறு மாதம் வகுப்புப் பாடம் அடுத்த 6 மாதம் ஆராய்ச்சி பாடம் என அடுக்கடுக்கான ஆசை வார்த்தைகளை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டதாகவும் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்த பின்னர் இதுவரை எந்தவித வசதியும் செய்து தரப்படவில்லை என்றும் மாணவர் கூறுகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் அதுகுறித்து கேட்டால் நிர்வாகம் தரப்பில் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர். இதனால் ஏறத்தாழ 12 ஆயிரம் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை இழந்து உள்ளதாக மாணவ மாணவியர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாநில சுகாதாரத் துறை மற்றும் முதலமைச்சரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற போலியான கல்லூரிகளை மூட வேண்டும் என்றும், கல்லூரி நிர்வாகத்தினர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : BJP functionary Arrested: பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.