மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுக்களை பதுக்கிவைத்திருந்த ஏழு பேர் கொண்ட கும்பலை மும்பை குற்றத்தடுப்பு காவல்துறை பிடித்துள்ளது.
காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் தஹிசார் என்ற இடத்தில் காவல்துறையினர் செக் போஸ்ட் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நான்கு பேருடன் வந்த காரில் 250 கட்டுக்கள் கொண்ட கள்ளநோட்டுகள் பிடிபட்டன. இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும். அவர்களை பிடித்து விசாரித்ததில், அந்தேரி பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அங்கு மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 100 கட்டுக்களை பறிமுதல் செய்தனர். இந்த ஏழு பேரிடமிருந்து ஏழு செல்போன்கள், லேப்டாப், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை ஜனவரி 31ஆம் தேதிவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் பாதியாக குறைந்த கோவிட் பாதிப்பு