ETV Bharat / bharat

”ஆட்சி கவிழ்ந்தால் கடந்த ஆண்டைப்போல் காலையில் பதவிப்பிரமாணம் நடக்காது” - தேவேந்திர ஃபட்னாவிஸ் - மகராஷ்டிரா முதலமைச்சர்

சிவசேனா - தேசிவயவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால், கடந்த ஆண்டைப் போல் காலையில் பதவிப்பிரமாணம் நடக்காது என்று கூறி, கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி, அஜித் பவாருடன் இணைந்ததை தேவேந்திர ஃபட்னாவிஸ் நினைவு கூர்ந்தார்.

Ajit Pawar and Fadnavis downplay
'ஆட்சிக்கவிழ்ந்தால் கடந்தாண்டைப் போல் காலையில் பதவிப்பிரமாணம் நடக்காது'- தேவேந்திர ஃபட்னாவிஸ்
author img

By

Published : Nov 23, 2020, 8:17 PM IST

Updated : Nov 23, 2020, 8:36 PM IST

மும்பை : கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாருடன் கூட்டுவைத்து அதிகாலையில், தேவேந்திர பட்னாவிஸ் ராஜ்பவனில் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்தார். ஆனால், அந்த ஆட்சி வெறும் 80மணி நேரம் மட்டுமே நீடித்தது.

இந்த நிகழ்வு குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தற்போது நினைவுகூர்ந்துள்ளார். அவுரங்கபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால், பதவிப்பிரமாணம் கடந்த ஆண்டைப் போல் காலையில் நடைபெறாது என்றும், அதுபோன்ற நிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

மகா விகாஸ் கூட்டணி அரசு, குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்கு மட்டும் திட்டங்களை செயல்படுத்துவதாகக் கூறிய அவர், அமைச்சர்கள் முன்வைக்கும் திட்டங்களை முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ நிராகரித்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிவசேனா கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இணைந்து வந்தாலும் மாநகராட்சித் தேர்தலில் அவர்களுக்கு எதிராக பாஜக சிறப்பாக செயலாற்றும் என்றார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா: மொபைலில் முத்தலாக் சொன்னவர் மீது வழக்குப்பதிவு

Last Updated : Nov 23, 2020, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.