ஸ்ரீநகர்: சினார் கார்ப்ஸின் (காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் யுக்திசார் அமைப்பு) ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஒரு உயர் அலுவலர் கூறும்போது, ”ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் காஷ்மீர் எல்லையைப் பற்றி அதிகம் பரவும் பொய்கள், புரட்டுகள், கட்டுக்கதைகளைக் கண்டறித்து நீக்கம் செய்வதற்காகத்தான் இந்த முடக்கம்” என்றார்.
நிறுவனம் வகுத்துள்ள விதிகள், நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தின் யுக்திசார் அமைப்பான சீனார் கார்ப்ஸ் பாதிக்கப்பட்டதாகவும் மக்கள் புகார் அளித்ததால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
எனினும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்தத் தரப்பிலிருந்தும் முறையான பதில் வரவில்லை என்று தெரிகிறது.
இதையும் படிங்க:கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிப்பு