கர்நாடகாவில் 25 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்! - குவாரி வெடிவிபத்து
பெங்களூரு: யாதகிரியில் உள்ள குவாரி ஒன்றில் 25 கிலோ எடைகொண்ட வெடிபொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டம் சூரபுராவில் உள்ள குவாரி ஒன்றில் சட்டவிரோதமாக வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்படிருப்பதாக அப்பகுதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த காவல்துறையினர் குவாரியில் சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையில், 25 கிலோ எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் உள்பட ஏராளமான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, குவாரி மேலாளர் ஆனந்த ரெட்டி, ஓட்டுநர் மௌலி மஹ்பூப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மாதம் கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள குவாரி வெடிவிபத்தில் ஆறு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்குவாரி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்