இந்திய கடற்படையானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், 12 ஆயிரம் கப்பல்கள், 300 துறைமுகங்கள், 3 லட்சம் இந்திய மீன்பிடி கப்பல்கள் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளைக் கண்காணித்துவருகிறது.
இந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியம், உலகின் கடல் வர்த்தகத்தில் 75 விழுக்காட்டையும், உலகளாவிய கடல்சார் உற்பத்தியில் 50 விழுக்காட்டையும் கொண்டுள்ளது. அதனால் பல நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்குத் தொடர்புள்ளது.
அதன் காரணமாக இந்திய கடற்படை தகவல் மையம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை விரைவாகப் பகிரும் நோக்குடன் 21 நாடுகள், 22 பன்னாட்டு நிறுவனங்களுடன் கைக்கோத்துள்ளது.
அதில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், மாலத்தீவுகள், அமெரிக்கா, நியூசிலாந்து, மொரீஷியஸ், மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட 21 நாடுகளும் அடங்கும்.
இதையும் படிங்க: கப்பற்படையில் இணைந்த 5ஆவது ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்